பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்


பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 April 2022 7:39 PM IST (Updated: 23 April 2022 7:39 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரை தூய்மையான நகரமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் வேண்டுகோள் விடுத்தார்.

திருவாரூர்:
திருவாரூரை தூய்மையான நகரமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும் என நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் வேண்டுகோள் விடுத்தார்.
22 டன் குப்பைகள் 
திருவாரூர் நகரில் 30 வார்டுகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி குப்பைகளை வீடு, வீடாக வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து பெறப்படுகிறது. அதன்படி தினமும் 22 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
தீவிர தூய்மை பணி திட்டம்
தூய்மை பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் தற்போது நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் தீவிர தூய்மை  பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று திருவாரூர் நகராட்சி  தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசல் மாற்றுரைத்த விநாயகர் கோவிலில் இருந்து தீவிர தூய்மை பணி திட்டத்தை நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் நகராட்சி 30 வார்டுகளையும் முழுமையாக தூய்மை படுத்தி, சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் மாஸ் கிளினிங் என்றும் தீவிர தூய்மை பணி தொடங்கப்பட்டுள்ளது. 
தூய்மையான நகரமாக மாற்ற 
இதில் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகள், சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர் மண், கற்கள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி அனைத்து வார்டுகளில் நடைபெறும். திருவாரூரை தூய்மையான நகரமாக மாற்ற  பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நகராட்சி ஆணையர் பிரபாகரன், துப்புரவு அலுவலர் விஜயகுமார், நகராட்சி மேலாளர் முத்துக்குமார், நகர அமைப்பு ஆய்வாளர் கணேச ரங்கன்  ஆகியோர் கலந்துகொண்டனர். 
--



Next Story