7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 23 April 2022 7:40 PM IST (Updated: 23 April 2022 7:40 PM IST)
t-max-icont-min-icon

7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

கூடலூர்

கூடலூர் அருகே உள்ள லாரன்ஸ்டன் பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவரது விவசாய தோட்டத்துக்குள் இன்று மதியம் 1 மணிக்கு மலைப்பாம்பு புகுந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். இதை அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்தனர். 

பின்னர் புதர்களுக்கு இடையே பதுங்கி இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். சுமார் 7 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக கொண்டு சென்று முதுமலை வனப்பகுதியில் விட்டனர். அதன் பின்னரே தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

Next Story