புத்தக பயன் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை


புத்தக பயன் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 23 April 2022 7:40 PM IST (Updated: 23 April 2022 7:40 PM IST)
t-max-icont-min-icon

புத்தக பயன் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை

கூடலூர்

உலக புத்தக தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பொக்காபுரம் பழங்குடியினர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களை மசினகுடியில் உள்ள நூலகத்துக்கு தலைமை ஆசிரியை கலாவதி தலைமையிலான ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். 

அங்கு நூலகத்தில் மாணவர்கள் அமர்ந்து புத்தகங்களை படித்தனர். தொடர்ந்து நூலகம், புத்தகத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் புத்தகங்கள் படிப்பதால் பொது அறிவு வளரும், கல்வித்திறன் மேம்படும் என்று ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். 


Next Story