பல்துறை பணி விளக்க கண்காட்சி


பல்துறை பணி விளக்க கண்காட்சி
x
தினத்தந்தி 23 April 2022 7:55 PM IST (Updated: 23 April 2022 7:55 PM IST)
t-max-icont-min-icon

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடந்த பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கடலூர், 

75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை கொண்டாடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர்கள் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், சபா.ராஜேந்திரன்    எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை, பள்ளி கல்வி துறை மற்றும் வேளாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

மாணவர்களுக்கு பரிசு

தொடர்ந்து அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து 75-வது சுதந்திர தின விழாவையொட்டி பள்ளிக்கூடங்களில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, நகர செயலாளர் ராஜா மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story