இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
தொடர் மின்வெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டூர்:
தொடர் மின்வெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்வெட்டு
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. கோட்டூரை அடுத்த மூன்றாம்சேத்தி கிராமத்தில் மின்மாற்றி மற்றும் மின்சாதனங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்தது. இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து 3 நாட்கள் மின் தடைஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கிராமமக்கள் நேரில் சென்று பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர் மின்வெட்டால் குழந்தைகள், 10,12-ம் வகுப்பு பொது தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், முதியோர்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலைமறியல்
இந்தநிலையில் நேற்று தொடர் மின்வெட்டை கண்டித்தும், மின்வெட்டை சரிசெய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் கிராமமக்கள் இரட்டை புலி என்ற இடத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னார்குடி -திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story