சரியான திட்டமிடல் இல்லாததால் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால் பணி
ராமநத்தம் அருகே சரியான திட்டமிடல் இல்லாததால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே வெங்கானூர் கிராமத்தில் 3 மாதத்திற்கு முன்பு மழைநீர் வடிகால் அமைப்பதற்காக 100 மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளம் வழியாகத்தான் ஆடுதுறை வெள்ளாற்றில் இருந்து ஏந்தல், கொரக்கை உள்ளிட்ட 25 கிராமங்களுக்கு தண்ணீ்ர் வினியோகிக்கும் வகையில் கூட்டுகுடிநீர் திட்ட குழாயும், வெங்கானூர் கிராமத்திற்குள் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் குழாயும் பதிக்கப்பட்டுள்ளது. எனவே 2 குடிநீர் குழாய் செல்லும் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கக்கூடாது என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பள்ளம் தோண்டப்பட்டதோடு மழைநீர் வடிகால் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தையும் மூடாததால் அதில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
பள்ளத்தை மூட...
மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் கழிவுநீரில் தவறி விழுந்து, காயமடைந்து செல்வதையும் காணமுடிகி்றது. எனவே பெரிய அளவில் விபத்து நிகழும் முன், சரியான திட்டமிடல் இல்லாமல் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story