தர்மபுரியில் திருநங்கை வீட்டில் நகை திருட்டு
தினத்தந்தி 23 April 2022 8:10 PM IST (Updated: 23 April 2022 8:10 PM IST)
Text Sizeதர்மபுரியில் திருநங்கை வீட்டில் நகை திருட்டு போனது.
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிபேட்டை தெற்கு ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது 42). திருநங்கையான இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நள்ளிரவில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகையை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire