தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா மறுபூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அப்போது அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றன. திருவிளக்கு பூஜையையொட்டி, பெண்களுக்கு ஜாக்கெட் துணி, மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர் முருகவேல் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை சித்திரை விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story