மராட்டியத்தில் புதிதாக 194 பேருக்கு கொரோனா


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 23 April 2022 8:24 PM IST (Updated: 23 April 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிதாக 194 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதில் சனிக்கிழமை புதிதாக 194 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மார்ச் 25-ந் தேதிக்கு (272 பேருக்கு தொற்று) பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு ஆகும். 
 மாநிலத்தில் இதுவரை 78 லட்சத்து 76 ஆயிரத்து 697 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 47 ஆயிரத்து 832 பேர் பலியாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் புனேயில் மட்டும் ஒருவர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளார் 
தலைநகர் மும்பையில் சனிக்கிழமை 9 ஆயிரத்து 453 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 72 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கடந்த புதன்கிழமை 98 பேர் நோய் தொற்றுக்கு ஆளகி இருந்தனர். அதன்பிறகு 2 நாட்களாக பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. 

Next Story