அலைதடுப்பு சுவர் அமைக்கக்கோரி தூத்தூரில் பெண்கள் சாலை மறியல்


அலைதடுப்பு சுவர் அமைக்கக்கோரி தூத்தூரில் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 April 2022 2:55 PM GMT (Updated: 23 April 2022 2:55 PM GMT)

அலைதடுப்பு சுவர் அமைக்கக்கோரி தூத்தூர் மீனவ கிராமத்தில் பெண்கள் சாலை மறியல் மற்றும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்.

கொல்லங்கோடு, 
அலைதடுப்பு சுவர் அமைக்கக்கோரி தூத்தூர் மீனவ கிராமத்தில் பெண்கள் சாலை மறியல் மற்றும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். 
அலை தடுப்பு சுவர்
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதியில் கடல் சீற்றதால் மீனவ கிரமங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அலை தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் சில பகுதிகளில் தடுப்புசுவர் சேதமடைந்தும், சில பகுதிகளில் அமைக்கப்படாலும் உள்ளன. 
குறிப்பாக தூத்தூர் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் அபாயத்தில் உள்ளன. எனவே, தங்கள் பகுதியில் அலைதடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சாலை மறியல்
இந்தநிலையில் அலை தடுப்பு சுவர் அமைக்கக்கோரியும், இதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும் காலை 10.30 மணியளவில் தூத்தூரில் மீனவ கிராமத்தை சேர்ந்த பெண்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது துறைமுக பகுதிக்கு பாறை கற்களை ஏற்றி கொண்டு வந்த 2 லாரிகளை சிறைபிடித்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மீனவ பெண்கள் துறை சார்ந்த அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை எனக்கூறினர். அத்துடன் சாலையில் அமர்ந்து கஞ்சி காய்ச்சவும் தொடங்கினர். மாலை 4.30 மணி வரை 6 மணி நேரம் நீடித்தது. 
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் சாலமோன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்கள் கோரிக்கை வைத்த பகுதிகளில் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.15 லட்சமும், எம்.பி. நிதியில் இருந்து ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பில் முதற்கட்ட பணிகள் வருகிற புதன்கிழமை ெதாடங்க உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அத்துடன் சிறைபிடிக்கப்பட்ட 2 லாரிகளும் விடுவிக்கப்பட்டன. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story