சாராயம் விற்ற 3 பேர் கைது


சாராயம் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2022 9:10 PM IST (Updated: 23 April 2022 9:10 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி பகுதியில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்போடை அருகே உள்ள ஈராவாய்க்கால் பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், தேத்தாகுடியை சேர்ந்த திராவிடமணி (வயது35), செம்போடையை சேர்ந்த செல்வராஜ் (44), வட கட்டளையை சேர்ந்த சிவகுமார் (45) ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story