மின்னல் தாக்கி 5 செம்மறி ஆடுகள் செத்தன


மின்னல் தாக்கி 5 செம்மறி ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 23 April 2022 9:27 PM IST (Updated: 23 April 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே மின்னல் தாக்கியதில் 5 செம்மறி ஆடுகள் செத்தன.

வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே  மின்னல் தாக்கியதில் 5 செம்மறி ஆடுகள் செத்தன.
இதுபற்றி கூறப்படுவதாவது:-
மின்னல் தாக்கி 5 ஆடுகள் செத்தன
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சுப்பிரமணியகவுண்டன் வலசு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் கந்தசாமி (வயது 54)விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஏராளமான செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றார்.
நேற்று மாலை 6 மணி அளவில் வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதியில்  இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கந்தசாமி தோட்டத்தில் மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த 5 ஆடுகளின் மீது திடீரென மின்னல் தாக்கியதில் 5 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே செத்தன.
அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
இதன் மதிப்பு ரூ.45 ஆயிரம் இருக்கும், இது குறித்து கந்தசாமி வருவாய்த்துறை மற்றும் போலீசார் கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மின்னல்  தாக்கி செத்த 5 ஆடுகளுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story