சாராய வியாபாரிகள் 3 பேர் கைது


சாராய வியாபாரிகள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2022 9:31 PM IST (Updated: 23 April 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில் சாராய வியாபாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கல்:
கீழ்வேளூர் அருகே இறையான்குடி கிராமத்தில் சாராய விற்பனை செய்யும் வியாபாரிகளை கைது செய்யக்கோரி வலிவலம் போலீஸ் நிலையத்தை பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து  வலிவலம் போலீசார் இறையான்குடி, சிங்கமங்கலம் பகுதியில் சாராயம் விற்பனை செய்பவர்களை தேடி வந்தனர்.  இந்த நிலையில் சாராய வியாபாரிகளான சிங்கமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த  கண்ணதாசன் (வயது42), இறையான்குடி படுகை தெருவை சேர்ந்த  நாகப்பன் (49), கீழவிடங்கலூர் மெயின் ரோட்டை சேர்ந்த கைலாசம் மகன் சுபாஷ்(30) ஆகிய 3 பேரையும் வலிவலம் போலீசார் கைது செய்தனர்.  மேலும் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வரும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
--

Next Story