சாராயத்திற்கு எதிரான சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்


சாராயத்திற்கு எதிரான சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 23 April 2022 9:31 PM IST (Updated: 23 April 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்:
நாகையில்  சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
சைக்கிள் ஊர்வலம்
நாகையில் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா வரவேற்றார்.
சாராயம் குடிப்பதால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு நிம்மதி பறிபோய் விடும். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். பசியின்மை, கண்பார்வை குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற உடல் நலப்பிரச்சினைகள் ஏற்படும்.
சாலை விபத்துகள்
 சாலை விபத்துகள், பொருட்சேதங்கள் ஏற்படும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
ஊர்வலம் புத்தூர் ரவுண்டானாவில் தொடங்கி, மேலக்கோட்டை வாசல் படி, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story