பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; டாஸ்மாக் ஊழியர் பலி
தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
தேவதானப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர், கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் செந்தில்குமார் நேற்று வடமதுரையில் இருந்து பண்ணைக்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் டம்டம் பாறையின் கீழ் பகுதியில் அவர் வந்தபோது, கவுஞ்சியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த செந்தில்குமார் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story