கலவை எந்திரத்தில் தவறி விழுந்து ஊழியர் பலி
குலசேகரன்பட்டினம் அருகே கலவை எந்திரத்தில் தவறி விழுந்து ஊழியர் இறந்தார்.
குலசேகரன்பட்டினம்:
காயாமொழி பள்ளத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ரங்கசாமி நாடார் மகன் ஆறுமுகப்பெருமாள் (வயது22). இவர் குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழி அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 22-ந் தேதி அதிகாலை ஆறுமுகப்பெருமாள் மண்கலவை எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், ஆறுமுகப் பெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி குலசேகரன்பட்டினம் போலீசில் அவரது தம்பி முனீஸ்வரன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (ெபாறுப்பு) கனகபாய் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story