கிணற்றில் தவறி விழுந்து கடமான் பலி
கண்டமனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கடமான் பலியானது.
கடமலைக்குண்டு:
கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட டாணா தோட்டம் வனப்பகுதியில் கடமான்கள் அதிக அளவில் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை கடமான் ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக மலையடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்தது.
அப்போது அங்கிருந்த கிணற்றில் கடமான் தவறி விழுந்தது. இதில் நீரில் மூழ்கிய அந்த கடமான் பலியானது. இதுகுறித்து தோட்ட உரிமையாளர், கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள், கடமானின் உடலை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கடமான் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
Related Tags :
Next Story