திருமருகல், கீழ்வேளூர் பகுதிகளில் பரவலாக மழை
திருமருகல், கீழ்வேளூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் உளுந்து, பயறு அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திட்டச்சேரி:
திருமருகல், கீழ்வேளூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் உளுந்து, பயறு அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பரவலாக மழை
திருமருகல் வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகலில் பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்
இந்த நிலையில் நேற்று திருமருகல் ஒன்றிய பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், எரவாஞ்சேரி, மருங்கூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
அறுவடை பணி பாதிப்பு
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
தற்போது பெய்த மழையால் உளுந்து, பயறு அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. பின்னர் மதியம் 11.35 மணி முதல் மழை பெய்தது. இந்த மழை 45 நிமிடம் நீடித்தது.
கீழ்வேளூர், தேவூர், இரட்டை மதகடி, காக்கழனி நீலப்பாடி, அத்திப்புலியூர், குருமணாங்குடி, ஏரவாஞ்சேரி, குருக்கத்தி, கூத்தூர், பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், ஓர்குடி, கடம்பன்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story