முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 6 டன் வேளாண் விளை பொருள்கள் ஏலம்
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 6 டன் வேளாண் விளை பொருள்கள் ஏலம் விடப்பட்டது.
முத்தூர்
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 6 டன் வேளாண் விளை பொருள்கள் ஏலம் விடப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 13 ஆயிரத்து 283 தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.27.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.60-க்கும், டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
மேலும் 41 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.87.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.65-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
தேங்காய் வரத்து உயர்வு
மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 499 தேங்காய்கள் கூடுதலாகவும், 3 தேங்காய் பருப்பு மூட்டைகள் குறைவாகவும் கூடுதலாக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் 1 கிலோவிற்கு ரூ.1.-ம், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு ரூ.165-ம் குறைவாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது. மேலும் கடந்த 1 மாத காலமாகவே தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 6 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டது.
மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மூட்டைகள் 6 டன் அளவில் மொத்தம் ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 627-க்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story