தினத்தந்தி புகார் பெட்டி
திருவாரூர் மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குளம் தூர்வாரப்படுமா?
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் விளக்குடி கிராமம் கீழத்தெருவில் கண்ணகுட்டை என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் பாசிகள் படர்ந்து அசுத்தமாக உள்ளது. மேலும் தூர்வாரப்படாததால் ஆகாயதாமரை செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருவாரூர்.
சுத்தம் செய்யப்படுமா?
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் பார்வையாளர்கள் அமரும் இடம் உள்ளது. அந்த இடம் சுகாதாரமற்ற முறையில் அசுத்தமாக குப்பைகள்நிறைந்து அசுத்தமாக காட்சி அளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து உள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்.
Related Tags :
Next Story