ஆடு கோழிகளின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது


ஆடு கோழிகளின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது
x
தினத்தந்தி 23 April 2022 10:07 PM IST (Updated: 23 April 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

குண்டடம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகளின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

குண்டடம்
குண்டடம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகளின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஆடுகள் வரத்து அதிகரிப்பு
இது குறித்து ஆடு,கோழிகளை வாங்கி விற்கும் வியாபாரிகள் கூறியதாவது:-
சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணிவரை ஆடு கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.  அதன்படி குண்டடம் வாரச்சந்தைக்கு ஆடு கோழிகளை குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர், கர்நாடக உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.
 இறைச்சி கடைகளில் சில வாரங்களாக விற்பனை குறைவாக இருப்பதால் இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் கட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.6ஆயிரத்து 200-க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.5ஆயிரத்து 500-க்கு விலைபோயுள்ளது. ரூ.12ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடு இந்த வாரம் ரூ.9ஆயிரத்து 500 ஆக குறைந்துவிட்டது.
கோழிகள் விலை வீழ்ச்சி
அதேபோல் கோழிகளும் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணிவரை ஆயிரக்கணக்கான கோழிகள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. வீடுகளில் கோழி மற்றும் சேவல்களை வளர்ப்போர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். 
இந்த கோழிகளை வாங்க தாராபுரம், காங்கயம், பல்லடம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கறிக்கடைக்காரர்கள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வாரம் இறைச்சிக்கு விற்கும் கோழிகள் கடந்த வாரம் 1 கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விலைபோனது. ஆனால் இந்த வாரம் 1 கிலோ ரூ.300முதல் ரூ.350 வரை விலைபோனது.
இவ்வாறு  வியாபாரிகள் கூறினர்.

Next Story