கடைகளில் கலெக்டர் சோதனை
வாலாஜாவில் உள்ள கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென சோதனை செய்தார்.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
இந்த நிலையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வாலாஜாவில் திடீர் சோதனை செய்தார். அப்போது பஜார் வீதி, அணைக்கட்டு ரோடு, சோளிங்கர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த 35-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்யப்பட்டது.
இதில் தடை செய்யப்பட்ட 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த கடைகளுக்கு ரூ.37 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வின் போது நகராட்சி கமிஷனர் சரவணன், தாசில்தார் ஆனந்தன், சமூகபாதுகாப்பு தாசில்தார் பாக்கியநாதன், வருவாய்த்துறையினர், நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story