24 அரசு நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பிற்கான தேர்தல்
உடுமலை ஒன்றியத்தில் 24 அரசு நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பிற்கான தேர்தல் நேற்று நடந்தது.
உடுமலை
உடுமலை ஒன்றியத்தில் 24 அரசு நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பிற்கான தேர்தல் நேற்று நடந்தது.
பள்ளி மேலாண்மைக் குழு
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின்படி அரசு நடுநிலைப்பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான பெற்றோர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான பெற்றோர்கள் கூட்டம் மற்றும் மேலாண்மை குழுதேர்தல் நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் 2 பேர், பெற்றோர் பிரதிநிதிகள் 12 பேர், தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர், ஒருகல்வியாளர் மற்றும்ஒரு சுய உதவிக்குழு உறுப்பினர் என மொத்தம்20 பேர் கொண்ட மறுகட்டமைப்பு குழு அமைக்கப்பட்டது. இதில் சில பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டி இல்லாததால் குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். போட்டி இருந்த பள்ளிகளில் கையை உயர்த்தி ஆதரவு தெரிவிக்கும் முறைமூலம் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.
சுண்டக்காம்பாளையம் ஊராட்சி பள்ளி
உடுமலை ஒன்றியத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மறுகட்டமைப்பிற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக கலைவாணி தேர்வு செய்யப்பட்டார். இந்த பள்ளிக்கு பார்வையாளராக கல்வித்துறையால் நியமிக்கப்பட்டிருந்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கு.கண்ணபிரான்,இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து மறுகட்டமைப்புக்குழுவினருக்கு எடுத்துக் கூறினார். பள்ளியின் வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆசிரியர் பிரதிநிதி மகுடீஸ்வரி நன்றி கூறினார்.
உடுமலை ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத்தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அவர்கள் பள்ளியின் வளர்ச்சி குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story