இந்து தர்மத்தை காப்பது பா.ஜனதாவின் கடமை-சி.டி.ரவி எம்.எல்.ஏ.


இந்து தர்மத்தை காப்பது பா.ஜனதாவின் கடமை-சி.டி.ரவி எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 23 April 2022 10:21 PM IST (Updated: 23 April 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

இந்து தர்மத்தை காப்பது பா.ஜனதாவின் கடமை என சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஹரிஹரபுராவில் உள்ள ஆதி சங்கராச்சாரியார் மடத்தில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- இந்தியாவில் 32 ஆயிரம் கோவில்கள் நாசப்படுத்தப்பட்டு விட்டன. இதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் காரணம். மங்களூருவில் உள்ள ஒரு கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டு இருக்கிறது. உலகத்தில் 28 நாடுகளை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் ஆக்கிரமித்து உள்ளனர்.

 அவர்கள் சிந்து நதியின் நாகரீகத்தை மாற்றியுள்ளனர். அவர்கள் செய்யும் செயலை மற்றவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் யாரை வேண்டுமானாலும் மதமாற்றம் செய்து கொள்ளட்டும். இருப்பினும் இந்து தர்மத்தை காப்பாற்றுவது பா.ஜனதாவின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார். 
பின்னர் அவர் மடாதிபதி சரஸ்வதி சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார். 

Next Story