சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
குத்தாலம் அருகே அரையபுரம் சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
குத்தாலம்;
குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 25-ம் ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் மாரியம்மனுக்கு பூச்சொரிதல், சந்தனக்காப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி காவிரி ஆற்றங்கரையில் இருந்து அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை புறப்பட்டு வாணவேடிக்கையுடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன. பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story