ஆந்திராவை சேர்ந்தவர் மயங்கி விழுந்து சாவு
நாகூர் தர்காவிற்கு வந்த ஆந்திராவை சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நாகூர்:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ஜகனுமா பாத்திமா நகரை சேர்ந்தவர் செய்யது ஹமீது(வயது 43). இவர் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் நாகூர் தர்காவிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை செய்யது ஹமீதுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செய்யது ஹமீது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story