கருப்புசாமி கோவில் திருவிழா


கருப்புசாமி கோவில் திருவிழா
x

வத்தலக்குண்டுவில், கருப்புசாமி கோவில் திருவிழா நடந்தது.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருணாசலபுரத்தில் உள்ள கருப்புசாமி, நாகம்மாள் கோவிலில் திருவிழா நடந்தது. அதையொட்டி பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். 

சில பக்தர்கள் சாமிகள், தேசிய தலைவர்கள் போல வேடமிட்டு வந்தனர். இதையடுத்து கரகத்தை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.  திருவிழாவில் விழாகுழுவினர் ரமேஷ் குமரேசன், லிங்கம், பாண்டி, ஆசை, மற்றும் ஊர் பிரமுகர்கள் செல்லத்துரை, மருது ஆறுமுகம், தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story