துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்


துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 23 April 2022 10:34 PM IST (Updated: 23 April 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

திருக்கடையூர், ஏப்.24-
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்து சாமி தரிசனம் செய்தார். கோவிலில் கோபூஜை, கஜபூஜை, செய்து வழிபட்ட அவர் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் அபிராமி படம் மற்றும் பிரசாதம் வழங்கினர். அப்போது சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன்  மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

Next Story