விற்பனையாகாத வெங்காயத்தை வீதியில் கொட்டிய விவசாயிகள்


விற்பனையாகாத வெங்காயத்தை வீதியில் கொட்டிய விவசாயிகள்
x
தினத்தந்தி 23 April 2022 10:41 PM IST (Updated: 23 April 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

விலைவீழ்ச்சியால் வேதனை அடைந்த விவசாயிகள், விற்பனையாகாத வெங்காயத்தை வீதியில் காட்டி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்ெகட்டுக்கு, கடந்த சில நாட்களாக சின்ன  வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் அதிக அளவு வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து அதிகரித்ததன் எதிரொலியாக, வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயம் ரூ.15-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மார்க்ெகட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த வெங்காயம் வாங்கப்படாமல் நீண்ட நாட்களாக அங்கேயே இருப்பு வைக்கப்பட்டது. இதனால் வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பொதுவாக மழைக்காலத்தில் மட்டுமே, வெங்காயம் அழுகி விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆனால் தற்போது கோடைகாலத்திலேயே இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாமல், வீதியில் கொட்டும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

அதன்படி ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பகுதியில் மூட்டை, மூட்டையாக குப்பைகளில் வெங்காயம் கொட்டப்படுகின்றன. இதுபோன்ற நிலை நீடித்தால், வருங்காலத்தில் வெங்காயம் பயிரிடுவதை விவசாயிகள் கைவிடும் நிலை ஏற்படும் என்றால் அது மிகையல்ல.

Next Story