மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணி


மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணி
x
தினத்தந்தி 23 April 2022 10:45 PM IST (Updated: 23 April 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப்பணி நேற்று நடந்தது.

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் சுத்தமான மற்றும் பசுமையான நீடித்த சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தூய்மை பணி முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் ஒவ்வொரு மாதமும் 2, 4-ம் சனிக்கிழமைகளில் இந்த முகாமை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தூய்மை பணி முகாம் நேற்று நடந்தது.

இதில் மாநகராட்சி 1-வது வார்டு பி.வி.தாஸ் காலனி, 3-வது வார்டு ஆர்.எம்.காலனி 80 அடி ரோடு, 8-வது வார்டில் நாயக்கர் புதுத்தெரு 1,2,3 சந்துகள், 12-வது வார்டு கோபாலசமுத்திரக்கரை, 13-வது வார்டு ஜோசப் காலனி, 23-வது வார்டு ஆர்.வி.நகர், 24-வது வார்டு மதுரை ரோடு, 28-வது வார்டு ஆக்னேஸ்மேரி தெரு, 30-வது வார்டு நாகல் புதூர் 1,2,3 சந்துகள், 32-வது வார்டு எழில்நகர், 39-வது வார்டு நத்தர்ஷா தெரு, 41-வது வார்டு பாஸ்கா மைதானம் (மேற்கு, தெற்கு), பாவனச்சாவடி, 43-வது வார்டு வேடப்பட்டி விரிவாக்க பகுதி, 47-வது வார்டு கலைஞர்நகர், பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் நடந்தது.

Next Story