மரத்தில் சரக்கு வாகனம் மோதல்; பெண் பலி


மரத்தில் சரக்கு வாகனம் மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 23 April 2022 11:01 PM IST (Updated: 23 April 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.

திண்டிவனம், 

சென்னை பெரும்பாக்கம் ஜெயா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி முனீஸ்வரி(வயது 45). இவர் சென்னையில் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து பலாப்பழங்களை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் பேத்திகள் பவானி(10), ஸ்ரீ(7) ஆகியோரும் சென்றனர். சரக்கு வாகனத்தை சென்னை வேளச்சேரி இந்திரா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது பாஷா மகன் ஆதாம் பாஷா ஓட்டினார். சரக்கு வாகனம் திண்டிவனம் அடுத்த சாரம் லேபை அருகில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பவானி, ஸ்ரீ, ஆதாம்பாஷா ஆகியோர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story