நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 April 2022 11:03 PM IST (Updated: 23 April 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மண்டல செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வணிகர் பாசறை செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நல்லான், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அனிஷ்பாத்திமா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு வெளிமாநிலத்தவர்களுக்கு கட்டாய உள்நுழைவு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story