சங்கராபுரம் பகுதி கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
சங்கராபுரம் பகுதி கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள மஞ்சபுத்தூர் காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் கோவில், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமாள் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story