சங்கராபுரத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


சங்கராபுரத்தில்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 April 2022 11:15 PM IST (Updated: 23 April 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சங்கராபுரம், 

சங்கராபுரத்தில் சார்நிலை கருவூலம் அருகில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இதற்கு மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் அருள், மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் ஆண்டாள், புலவர்.மோகன், அமைப்பு செயலாளர் மா.இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விஜயகாந்த் வரவேற்றார். 


மாநில தலைவர் மணிவாசகன் கருவூல அலுவலர் அரசாணை 304-ஐ அமுல்படுத்தாததை கண்டித்து பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் கோமதுரை, பன்னீர்செல்வம், மாரி, தலைமை ஆசிரியர்கள் ஜனசக்தி, செந்தில்வேலன் நிர்வாகிகள் பிரவீன்குமார், கலாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story