ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மும்பைக்கு திடீர் வருகை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 23 April 2022 11:16 PM IST (Updated: 23 April 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரை அறைந்து சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் திடீரென மும்பைக்கு வந்தார்.

மும்பை, 
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரை அறைந்து சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் திடீரென மும்பைக்கு வந்தார்.  
கன்னத்தில் அறைந்த நடிகர்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மாதம் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதை பெறுவதற்காக வந்திருந்தார்.
விழாவில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளார் என அறைந்து, விழா அரங்கை அதிர வைத்தார். 
நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் அகாடமி 10 ஆண்டுகள் தடை விதித்தது.
 திடீர் வருகை
இந்த நிலையில் இன்று மும்பை கலினாவில் உள்ள தனியார் விமான நிலையத்திற்கு வில் ஸ்மித் திடீரென வந்து இறங்கினார். அவரை ஒருவர் வரவேற்று சென்றார். மேலும் காவி உடை அணிந்த ஆன்மீகவாதி ஒருவரும் அருகில் நின்றார். வில் ஸ்மித்தும் சிரித்தப்படி, அங்கு இருந்த ரசிகர்களுக்கு கை காண்பித்தபடி சென்றார். 
ஆஸ்கர் விழா சர்ச்சைக்கு பிறகு பொதுவெளியில் அவர் தோன்றுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. 
இந்தநிலையில் அவர் மும்பை வந்திருப்பதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை. வில் ஸ்மித் மும்பை வருவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே அவா் மும்பைக்கு கடந்த 2019-ம் ஆண்டு வந்திருந்தார். அப்போது அவர் இந்தி நடிகர்கள் சிலரையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. 

Next Story