விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத்திட்ட அட்டை வழங்கும் முகாம்


விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத்திட்ட  அட்டை வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 23 April 2022 11:18 PM IST (Updated: 23 April 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் முகாம் நாளை(திங்கட்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.

மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் முகாம் நாளை(திங்கட்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. 
இது குறித்து மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
பயிர்க்காப்பீட்டு திட்ட அட்டை 
மயிலாடுதுறை வட்டாரத்தில் கிசான் கடன் அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் முகாம் நாளை(திங்கட்கிழமை) தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. நாளை திருவிழந்தூர், மன்னம்பந்தல், பொன்னூர், கிழாய், பட்டவர்த்தி, கீழமருதாநல்லூர், குறிச்சி, வில்லியநல்லூர், அகரகீரங்குடி கிராமங்களிலும், 26-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வள்ளாலகரம், செருதியூர், பாண்டூர், கேசிங்கன், இளந்தோப்பு, அருவாப்பாடி, தாழஞ்சேரி, மேலாநல்லூர், பட்டமங்கலம் கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 
30-ந் தேதி வரை
 27-ந் தேதி(புதன்கிழமை) அருண்மொழிதேவன், கோடங்குடி, மகாராஜபுரம், ஆத்தூர், தலைஞாயிறு, கங்கணம்புத்தூர், சித்தமல்லி, மொழையூர், சித்தர்காடு ஆகிய கிராமங்களிலும், 28-ந் தேதி(வியாழக்கிழமை) மயிலாடுதுறை ரூரல், நல்லத்துக்குடி, திருமங்கலம், காளி, பூதங்குடி, வரதம்பட்டு, ஆனந்ததாண்டவபுரம், கொற்கை, தருமதானபுரம், மறையூர் ஆகிய கிராமங்களிலும், 29-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஆனைமேலகரம், குளிச்சார், முருகமங்கலம், நமச்சிவாயபுரம், முடிகண்டநல்லூர், கடக்கம், நீடூர், மணக்குடி, மூவலூர் ஆகிய கிராமங்களிலும், 30-ந் தேதி(சனிக்கிழமை) மாப்படுகை, உளுத்துக்குப்பை, திருச்சிற்றம்பலம், ஐவநல்லூர், கடலங்குடி, கடுவங்குடி, சேத்தூர், சோழம்பேட்டை ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் தகுதியுடைய விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story