அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 23 April 2022 11:25 PM IST (Updated: 23 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை, 
தேனி மாவட்டம் கடமலைகுண்டு பாலூத்து பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 30). இவர் மதுரை தல்லாகுளம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், மதுரையை சேர்ந்த சரவணன், கருப்பையா, தேனியை சேர்ந்த முத்துபாண்டி ஆகியோர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறினர். மேலும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என கூறினர். இதனை நம்பிய நான், அவர்களிடம் ரூ.6 லட்சத்தை கொடுத் தேன். சில மாதங்கள் கழித்து, வேலையில் சேருவதற்கான ஒரு ஆவணத்தை என்னிடம் கொடுத்தனர். அதனை எடுத்து கொண்டு மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றபோது அது போலி ஆவணம் என்பது தெரியவந்தது. என்னிடம் மோசடி செய்த அவர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் கருப்பையா, சரவணன், முத்துபாண்டி ஆகியோர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story