தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 April 2022 11:25 PM IST (Updated: 23 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

இருக்கையை மாற்ற வேண்டும்



வேலூர் கலெக்டர் அலுவலகம் ஆஞ்சநேயர் கோவில் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்தப் பஸ் நிறுத்த நிழற்கூடத்தில் இரும்பால் செய்யப்பட்ட 4 இருக்கைகள் உள்ளன. அந்த இருக்கைகளில் உள்ள கம்பிகளை இரவில் மர்ம நபர்கள் யாரோ உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள் இருக்கையில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் தவறி கீழே விழுகின்றனர். எனவே அந்த இருக்கையை மாற்றி புதிய இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆல்பர்ட், வேலூர்.

 சிதிலமடைந்த மின்கம்பம்



ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் பஞ்சாயத்துக்குஉட்பட்ட கோட்டகண்டிகை கிராமத்தில் வீடுகளுக்கு மத்தியில் உள்ள மின் கம்பம் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்த நிலையில் சிதிலமடைந்துள்ளது. இது, எந்த நேரத்திலும் விழுந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால் விரைந்து செயல்பட்டு புதிய மின் கம்பம் அமைத்து சரி செய்ய வேண்டும்.
-விநாயகம், மின்னல்.

 வேகத்தடை அமைக்கப்படுமா?

திருவண்ணாமலை-போளூர் சாலையில் அண்ணா நுழைவுவாயில் அருகே பச்சையம்மன் கோவில் நுழைவுவாயில் உள்ளது. இந்தக் கோவில் நுழைவுவாயில் எதிரிலுள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் சென்டர் மீடியனில் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த வழியாக வரும் வாகனங்களில் பெரும்பாலானவை அவ்வப்போது விபத்துகளை சந்திக்கின்றன. வேகமாக வரும் வாகனங்கள் அந்த இடைவெளி பகுதி வழியாக திரும்பும்போது விபத்தில் சிக்குகின்றன. எனவே போளூர் சாலையில் வாகனங்கள் வரும் வேகத்தைக் குறைக்கும் வகையிலும், விபத்தை தவிர்க்கும் வகையிலும் பச்சையம்மன் கோவில் நுழைவுவாயில் அருகே சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும்.
-மணி, திருவண்ணாமலை.

 நாய்கள் தொல்லை


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பெரும்பாலான பகுதிகளில் நாய்கள் கூட்டம் அதிகரித்து, ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் பொதுமக்களை நாய்கள் துரத்துகின்றன. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-ராகேஷ், ஆம்பூர்.

 கால்வாயில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

ராணிப்ேபட்டை மாவட்டம் அரக்ேகாணம் ரெயில் நிலையம் செல்லும் பாதையில் வலது, இடது புறங்களில் (ஸ்டேட் பாங்க் எதிரில்) தடுப்புச்சுவர் இல்லாமல் கழிவுநீர் கால்வாயில் வாகன விபத்து நடக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சு.சுந்தரமூர்த்தி, சித்தாம்பாடி.

 அடிபம்பு பழுது



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வழுர் அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு தொடக்கப் பள்ளி அருகில் மாணவ-மாணவிகள் அடிபம்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அடிபம்பு நீண்ட நாட்களாகப் பழுதடைந்துள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் சாப்பிட்டு விட்டு கை மற்றும் தட்டுகளை கழுவுவதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. ஊராட்சி நிர்வாகம் உடனே சரிசெய்து கொடுக்க வேண்டும்.
-தேவா, வழுர்.

வீணாக ெவளிேயறும் குடிநீர்



வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகில் உள்ள குண்டலப்பள்ளி கிராமத்தில் சிறு மின்விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியில் நீர் நிரப்பும்போதெல்லாம் வீணாக வெளிேயறுகிறது. தொட்டியின் குழாய் பழுதடைந்துள்ளது. பழுதடைந்த குழாயை சரி செய்து வீணாக வெளியேறும் நீரை தடுக்க வேண்டும்.
-மா.தங்கபாண்டியன், குண்டலப்பள்ளி.

ஒலிபெருக்கியால் மக்கள் அவதி

குடியாத்தம்-பலமநேர் சாலையில் அனுமன் கோவில் உள்ளது. இங்கு அனைத்து நாட்களிலும் காலை, மாலை நேரத்தில் ஒலி பெருக்கியில் பக்தி பாடல்கள் அதிக சத்தத்துடன் இசைக்கப்படுகிறது. இது, அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் ஒலிபெருக்கியில் சத்தம் குறைவாக வைத்து பக்தி பாடல்களை இசைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். அவ்வாறு செய்தால் மாணவ, மாணவிகள் கல்வி பயில, பொதுமக்கள் செல்போனில் ேபச வசதியாக இருக்கும்.
-ராஜா, குடியாத்தம்.

Next Story