மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால்


மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால்
x
தினத்தந்தி 23 April 2022 11:40 PM IST (Updated: 23 April 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை, 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்பட 134 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தங்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தவழும் மாற்றுத்திறனாளியான நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திடீரென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீப்பற்ற முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார் பெட்ரோல் கேனை கைப்பற்றி அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, அவர் கூறும்போது, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளராக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். தவழும் மாற்றுத்திறனாளியாக இருப்பதால், விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து 10 வருடங்களாக பணியாற்றியுள்ளேன். திடீரென்று பணியில் இருந்து விடுவித்ததால், குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் நிதி நெருக்கடியை காரணமாக சொல்லி எங்களை வெளியேற்றியுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில், அரசின் உத்தரவு இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story