கரூர் பகுதிகளில் பலத்த மழை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 April 2022 11:47 PM IST (Updated: 23 April 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

கரூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

கரூர் 
பலத்த மழை
கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் காலை 10 மணியளவில் கரூர், திருமாநிலையூர், சுங்ககேட் உள்ளிட்ட சுற்றுவட்டார பலத்த மழை் பெய்தது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், பொதுமக்கள் மழையில் நனைந்து சென்றனர். இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றனர். இதனால் கரூர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.. 
நொய்யல்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், தவிட்டுப்பாளையம், பாலத்துறை, நஞ்சை புகழூர், குறுக்குச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை சுமார் 6 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் பலத்த பெய்தது. இந்த மழையால் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்ட கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், உணவு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். 
வெளியூர்களுக்கு சென்று திரும்பிய இரு சக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர். மேலும் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. கனமழையின் காரணமாக சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.  இதனால் வற்றிய கிணறுகளில் நீர் ஊற்றெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் வாடிய பயிர் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கனமழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story