திருப்புவனம் வைகை ஆற்றில் இறங்கிய அழகிய மணவாள ரெங்கநாதபெருமாள்


திருப்புவனம் வைகை ஆற்றில் இறங்கிய அழகிய மணவாள ரெங்கநாதபெருமாள்
x
தினத்தந்தி 23 April 2022 11:50 PM IST (Updated: 23 April 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் வைகை ஆற்றில் இறங்கிய அழகிய மணவாள ரெங்கநாதபெருமாள்

திருப்புவனம், 
திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற அழகிய மணவாள ரெங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கிய வைபவம் முடிந்த பின்னர் அழகிய மணவாள ரெங்கநாதபெருமாளும் திருப்புவனம் வைகை ஆற்றில் இறங்கி திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன்படி நேற்று காலை 8 மணிக்கு மேல் கோவிலில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட குதிரையில் அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் எழுந்தருளினார்.
. பின்பு வைகை ஆற்றில் எழுந்தருளினார்.அதன் பின்பு திருப்புவனம் கோட்டை, திருப்புவனம் புதூர், மதுரை- மண்டபம் தேசிய நெடுஞ்சாலை, நரிக்குடி ரோடு, உச்சிமாகாளியம்மன் கோவில் வீதி, சேதுபதி நகர், மடப்புரம் விலக்கு ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிற்பகல் 2 மணிக்குமேல் சுவாமி கோவிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராகவன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story