நெமிலியில் சேதம் அடைந்த நூலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
நெமிலியில் சேதம் அடைந்த நூலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் செயல்பட்டு வந்த மாவட்ட கிளை நூலகம் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக சேதமடைந்த நிலையில் அதனை உடனடியாக மாற்றி தர வேண்டுமென ஒன்றியக்குழு தலைவர் வடிவேலுவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்பேரில் செயல்படாமல் இருந்த பழைய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம் சீரமைக்கப்பட்டு நூலகமாக மாற்றப்பட்டது. அதனை நேற்று ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு திறந்து வைத்தார்.
மேலும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் அறை, கணினி சேவை பிரிவு ஆகியவற்றை திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story