ஆத்மநாதசுவாமி கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்


ஆத்மநாதசுவாமி கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 24 April 2022 12:08 AM IST (Updated: 24 April 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஆத்மநாதசுவாமி கோவிலில் திருப்பணிகள் தொடங்கின.

ஆவுடையார்கோவில், 
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் தேரடி விநாயர் கோவில் திருப்பணி தொடக்க விழா, திருப்பெருந்துறை ஆதீனக்கிளை மடம் திருப்பணி தொடக்க விழா, பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட  அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி 24-வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் முதற்கால யாக பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் ஆலய திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் திருவாவடுதுறை ஆதீன காறுபாறு வைத்தியநாத தம்பிரான், ஆதீன தென்மண்டல மேற்பார்வையாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஆத்மநாதசுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story