தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தகன மேடை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், சோபனபுரம் ஊராட்சியை சேர்ந்த ஒடுவம்பட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் மயான பாதை வசதி, மயான மேடையின்றி, மழைக்காலங்களில் சடலங்களை தகனம் செய்வதில் இப்பகுதி மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். ஆகவே இப்பகுதியில் பாதை வசதியுடன் கூடிய மயான தகன மேடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஒடுவம்பட்டி, திருச்சி.
கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் சாலைகளின் நடுவே கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கால்நடைகள் மீது வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், துவரங்குறிச்சி, திருச்சி.
பயனற்ற நூலகம்
திருச்சி மாவட்டம், துறையூர் நகரம், 21-வது வார்டு பாலக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் நகராட்சியால் நூலகம் கட்டப்பட்டது. ஆனால் இந்த நூலகம் இதுநாள்வரை செயல்படாமல் உள்ளது. தற்போது இந்த நூலகம் தெருநாய்களின் வசிப்பிடமாக உள்ளது. மேலும் இதன் அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த நூலகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலச்சந்திரன், துறையூர், திருச்சி.
மேடு, பள்ளமான சாலை
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, என்.பூலாம்பட்டியில் நீண்ட ஆண்டு கோரிக்கைகளுக்கு பிறகு என்.பூலாம்பட்டியில் இருந்து குஜிலாம்பாறை மெயின் ரோடு வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அது மிகவும் தரமில்லாமலும், சமன் இல்லாமலும், மேடு, பள்ளங்களாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகளும், ஊர் மக்களும் மிகுந்த சிரமத்துடனேயே பயணிக்கின்றனர். அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், என்.பூலாம்பட்டி, திருச்சி.
Related Tags :
Next Story