சுத்தம், சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
சுத்தம், சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர்,
மக்கும் குப்பை, மக்காத குப்பை
கரூர் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் தேங்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதற்காக காவலர்கள் குடும்பத்தில் வசிக்கும் குடும்பத்தினருக்கு நேற்று பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கலந்து கொண்டு காவலர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை வழங்கினார். அப்போது அவர் கூறும்போது:-
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும், இதனால் இயற்கைக்கு ஏற்படும் சீற்றம் பற்றியும், மனித உடலுக்கு ஏற்படக்கூடிய தீங்கு பற்றியும் எடுத்துரைத்தார். குடியிருப்புகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுத்தம், சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். அவர்களுக்கு முன் உதாரணமாக பெற்றோர்கள் இருக்க வேண்டும். மேலும் கடைகளுக்கு செல்லும்போது காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கும்போது பிளாஸ்டிக் பைகளில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். துணிகளால் ஆன பைகளை பயன்படுத்த வேண்டும் என கூறினார்.
பயிற்சி காவலர்களுக்கான நூலகம்
தொடர்ந்து கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பயிற்சி காவலர்களுக்கான நூலகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் திறந்து வைத்து, பயிற்சி காவலர்களுக்கு புத்தகங்கள் வாசிப்பதன் முக்கியத்துவத்தையும், பொதுஅறிவு, நடப்பு நிகழ்வுகள் பற்றி தெரிந்து அன்றாடம் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், பயிற்சி காலத்தின்போது கிடைக்கக்கூடிய அறிய வாய்ப்புகளை பயன்படுத்தி தெளிவாக கற்றுகொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்று வரும் காவலர் பயிற்சியில் மொத்தம் 99 பயிற்சி காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் நூலகத்தில் சட்டப்புத்தகங்கள், பொதுஅறிவு, விஞ்ஞானம், நீதிக்கதைகள், தேசிய தலைவர்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள
Related Tags :
Next Story