பாறை குட்டை நீரில் மூழ்கி சிறுமி பலி
பாறை குட்டை நீரில் மூழ்கி சிறுமி பலியானார்.
மணப்பாறை, ஏப்.24-
மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டியைச் சேர்ந்தவர் கவுசிகா (வயது 12). இவர் கரூர் மாவட்டம், தோகைமலையில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அத்தை தனக்கோடியுடன் அருகே உள்ள பாறைக்குட்டையில் தேங்கி கிடந்த தண்ணீரில் துணிதுவைக்க சென்றார். அப்போது குட்டையில் இறங்கிய கவுசிகா குளித்துள்ளார். இதில் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்் நீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது அத்தை தனக்கோடி சத்தம் போட்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய கவுசிகாவை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. அதன் பின் மணப்பாறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கவுசிகாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடலுக்கு பின் அவர் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story