திருச்சி ரெயில் நிலையத்தில் 9½ கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கியது.

திருச்சி ரெயில் நிலையத்தில் 9½ கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கியது.
x
தினத்தந்தி 24 April 2022 12:45 AM IST (Updated: 24 April 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ரெயில் நிலையத்தில் 9½ கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கியது.

திருச்சி, ஏப்.24-
திருச்சி ரெயில் நிலையத்தில் 9½ கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கியது.
வெள்ளி பொருட்கள்
திருச்சி ரெயில் நிலையத்தில் நேற்று வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்தநிலையில் திருச்சி உறையூர் நெசவாளர் காலனியை சேர்ந்த கணேஷ் கடலூர் செல்வதற்காக ரெயில் நிலையம் வந்தார். அவர் வைத்து இருந்த பையை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், அதில் 9.54 கிலோ வௌ்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 858 ஆகும்.
அபராதம்
பின்னர், அதனை கைப்பற்றிய போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி இப்ராகீம் பார்க் அருகேநகைவியாபாரம் செய்து வருவதும், மேலும் ஆவணம்இன்றி கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.41 ஆயிரத்து 812அபராதம்விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளி பொருட்கள் அவரிடம்ஒப்படைக்கப்பட்டது.

Next Story