வட்டார சுகாதார திருவிழா
கிரிசமுத்திரம் ஊராட்சியில் வட்டார சுகாதார திருவிழாவை கதிர்ஆனந்த் எம்.பி.தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஆலங்காயம் வட்டாரத்திற்கு உட்பட்ட கிரிசமுத்திரம் அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.செ. வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டி.ஆர்.செந்தில், திட்ட விளக்க உரை ஆற்றினார். முகாமை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து சிறப்பு மருத்துவர்களை கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் ஆலங்காயம் ஒன்றிய குழுத் தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன், வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் சாரதி குமார் மற்றும் உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள், மருத்துவ அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story