எந்திரம் மூலம் உளுந்து பயிர் தெளிப்பு செயல் விளக்க முகாம்


எந்திரம் மூலம் உளுந்து பயிர் தெளிப்பு செயல் விளக்க முகாம்
x
தினத்தந்தி 24 April 2022 12:53 AM IST (Updated: 24 April 2022 12:53 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே எந்திரம் மூலம் உளுந்து பயிர் தெளிப்பு செயல் விளக்க முகாம் நடந்தது.

திருவையாறு:-

திருவையாறு அருகே எந்திரம் மூலம் உளுந்து பயிர் தெளிப்பு செயல் விளக்க முகாம் நடந்தது. 

உளுந்து சாகுபடி

திருவையாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் கோடை பருவத்தையொட்டி உளுந்து, பயறு, நெல் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. இதில் விதைகளை கைகளால் தூவி விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 
இந்த நிலையில் இந்த பகுதியில் முதன்முறையாக உளுந்து விதையினை எந்திரத்தின் மூலம் தெளிப்பது தொடர்பான செயல் விளக்க பயற்சி முகாம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விளாங்குடி கிராமத்தில் விவசாயி இளங்கோவன் நிலத்தில் நடந்தது. 

மகசூல் அதிகரிக்கும்

நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் சாருமதி, திட்ட ஆலோசகர் இளஞ்செழியன், திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் கூறியதாவது, ‘விதைகளை கைகளால் தெளிக்கும் போது சில இடத்தில் அடர்த்தியாகவும், சில இடத்தில் நீண்ட தூரத்துக்கு இடைவெளியுடனும் பயிர்கள் வளரும். தண்ணீர் விடுவதில் சிரமம் ஏற்படும். 
எந்திரத்தின் மூலம் விதை விதைப்பதால் ஆட்கள் கூலி குறைவதுடன், உரம் மிச்சமாகிறது. பயிர்கள் பரவலாக ஒரே சீராக வளரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் மகசூலும் அதிகரிக்கும்’ என்றனர்.

அலுவலர்கள்

முகாமில் துணை வேளாண் அலுவலர் குணசேகரன், வேளாண்மை உதவி அலுவலர் வெங்கடேசன், உதவி விதை அலுவலர்கள் ஜான்ஜெயக்குமார், ராஜா, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சக்கரவர்த்தி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story