புகார் பெட்டி
புகார் பெட்டி
குப்பைகள் அகற்றப்பட்டது
கணபதிபுரம் தபால் நிலையம் அருகில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
சேதமடைந்த மின்கம்பம்
இறச்சகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியின் அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மருடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பத்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலைக்குமார், தாழக்குடி.
வடிகால் வசதி தேவை
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சதோப்பு காலனி சாலையில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் வடிகால் ஓடை அமைத்து மழைநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ் குமார், அம்பலக்குளம்.
காத்திருக்கும் ஆபத்து
வேர்க்கிளம்பியில் இருந்து சித்திரங்கோடு செல்லும் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே பட்டுபோன பனை மரம் ஒன்று உள்ளது. இந்த பனை மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் நிற்கும் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
-எட்வின் ஜோஸ், கல்லங்குழி.
சேதமடைந்த சாலை
ராமன்புதூர் கார்மல் பள்ளியில் இருந்து பொன்னப்பநாடார் காலனி வழியாக ஆயுதப்படை முகாமிற்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காட்வின், நாகர்கோவில்.
சாலையில் பள்ளம்
வடசேரி எஸ்.எம்.ஆர்.வி.யில் இருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அரவிந்த், கிருஷ்ணன்கோவில்.
Related Tags :
Next Story